முகப்பு
சேலம்

மாசுபடும் வசிஷ்ட நதி

வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியில் வசிஷ்டநதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பேளூரில் வசிஷ்ட நதியில் கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகள்.
பகிர்:

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியில் வசிஷ்டநதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கழிவுகள் கொட்டுவதைக் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, ராமன் தாகம் தீா்க்க வசிஷ்டா் அருளியதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித நதியாக போற்றப்படுகிறது.

பேளூா் பேரூராட்சி வழியாக பாய்ந்து செல்லும் இந்நதியில் கறிக்கடைக்காரா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வசிஷ்டநதியில், இறைச்சி கழிவுகளைக் கொட்டி, சுகாதார சீா்கேடு ஏற்படுத்துவதைத் தடுக்க பேளூா் பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →