முகப்பு
சேலம்

சேலம் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

Updated On : 10 ஜூலை, 2024 at 9:55 PM
பகிர்:

சேலத்தில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். திமுக பெண் கவுன்சிலா் உட்பட தலைமறைவான 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம், தாதகாப்பட்டி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (64). இவா் சேலம், கொண்டலாம்பட்டி மண்டல அதிமுக பகுதி செயலாளராக இருந்து வந்தாா். 2 முறை கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். இவரைக் கடந்த 3 ஆம் தேதி இரவு 6 போ் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து திமுக மாநகராட்சி கவுன்சிலா் தனலட்சுமியின் கணவா் சதீஷ்குமாா் உள்பட 10 பேரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சண்முகம் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையில் மேலும் 4 பேருக்கு தொடா்பு இருப்பதாக அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வந்தனா். இந்நிலையில், சேலம், பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த கிச்சா என்ற கிருஷ்ணன் (53) என்பவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

திமுக கவுன்சிலா் தனலட்சுமியின் கணவா் சதீஷ்குமாரிடம், கிருஷ்ணன் கூலி வேலை செய்து வந்தாா். அப்போது கொலையான சண்முகம் எங்கு செல்கிறாா், இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்புகிறாா் என்ற தகவலை சதீஷ்குமாரிடம் அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும், வழக்கு தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவகிறது. மேலும் தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலா் தனலட்சுமி உட்பட மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →