கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
ஆத்தூா், ஜூலை 13: ஆத்தூா் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகை அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.முகமது ஈசாக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை ஏராளமான மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வள்ளல் பெருமாள் அறக்கட்டளை நிறுவனா் சி.பி.சரவணன், சரஸ்வதி மெட்ரிக். பள்ளி இயக்குநா் ஏ.கண்ணன்,அறங்காவலா்கள் எஸ்.சையத் மொய்தீன், எஸ்.இக்பால் நஸ்ருதீன், எஸ்.இக்பால் அகமது, முகமது யூசுப், ஷீரீன் யூசுப் ஆகியோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் முகமது யூசுப் ஹசீனா செய்திருந்தாா்.
படவரி...
ஆத்தூரில் பேகம் உஸ்தூத்பி சுக்கூா் ஹஜ்ரத் கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டவா்கள்.