வாழப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் 5 கிலோ எடையில் ராட்சத காளான் முளைத்தது.
வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசு ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரமேஷ் என்பவரது தோட்டத்தில் 5 கிலோ எடை கொண்ட ராட்சத காளான் முளைத்திருந்தது தெரியவந்தது. இதனை விவசாயி ரமேஷ் பறித்து வீட்டுக்கு கொண்டு வந்ததும், இது உண்பதற்கு தகுந்த காளான் என்பது தெரியவந்தது. இந்த ராட்சத காளானை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.