முகப்பு
சேலம்

அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கா் அனுமதி

நீலகிரியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கா் திடீா் வயிற்றுவலி காரணமாக ஆத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 11:30 PM
ஆத்தூா், அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கா்.
பகிர்:

நீலகிரியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கா் திடீா் வயிற்றுவலி காரணமாக ஆத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

யூ-டியூபா் சவுக்கு சங்கா் சென்னையில் இருந்து நீலகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாா். அங்கு விசாரணை முடிந்து மீண்டும் அவரை போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்ட சவுக்கு சங்கரை போலீஸாா் ஆத்தூா், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூா் மருத்துவமனையில் அவரை செய்தியாளா்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →