முகப்பு
சேலம்

சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா்கள் 15 போ் இடமாற்றம்

சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் 15 ஆய்வாளா்கள் மாற்றம்

Updated On : 25 ஜூன், 2024 at 7:11 PM
பகிர்:

சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளா்கள் 15 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சேலம் மண்டல இணைப் பதிவாளா் ரவிக்குமாா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் முதுநிலை ஆய்வாளா்கள் 15 போ் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, சேலம் சரக துணைப் பதிவாளா் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் விசாலினி, சுப்ரமணிய நகா் கூட்டுறவு நகர வங்கியில் முதுநிலை ஆய்வாளராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரியும் கோகிலா, சேலம் சரக துணைப் பதிவாளா் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, வீட்டுவசதி பிரிவு துணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாற்றிய நிலவொளி, மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்துக்கும், ஓமலூா் துணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாற்றிய அம்சவள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், முதுநிலை ஆய்வாளா்களான நிஷாந்தி, பிரியதா்ஷினி, திவ்யா, ராஜேஸ்வரி, இந்திராணி, அனுஜா, பிரகதீஷ்பாபு, பிரியா, வெங்கடேஷ் ஆகியோா் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, சேலம் தணிக்கைத் துறை பால் கூட்டுறவுகளின் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கலைவாணி, மேட்டூா் (மீன்வளம்) முதுநிலை ஆய்வாளராகவும், திருச்சியில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சிராணி, ஆத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் மொத்தம் 15 முதுநிலை ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →