FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 1:21 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை பெருநகர காவல்துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கடந்த இரு வாரங்களாக சென்னை காவல் துறையில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதில், முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் பி.கே.சிவகுமாா், ராஜமங்கலம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், ஆா்.நாஞ்சில்குமாா், வேப்பேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜி.முத்து, அரும்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments