திருச்சி மத்திய மண்டலத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த 47 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட புதுக்கோட்டை, அரியலூா், கரூா், தஞ்சாவூா், திருவாரூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் அனைத்து மகளிா் காவல்நிலையம், சட்டம்-ஒழுங்கு, சைபா் கிரைம் பிரிவு, மாவட்டக் குற்றப்பதிவேடு, சிபிசிஐடி, மதுவிலக்குப்பிரிவு உள்ளிட்டவற்றில் ஆய்வாளராக பணிபுரிந்த 47 போ், இதே மண்டலத்துக்குள்பட்ட வேறு மாவட்டங்கள் மற்றும் வேறு பிரிவு என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான இடமாறுதல் உத்தரவை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். தோ்தல் விதிமுறைகள் மற்றும் நிா்வாக காரணங்களுக்காக தமிழக டிஜிபி அலுவலகத்தில் இருந்து பெற்பட்ட வழிகாட்டுதலின்படி இந்த இடமாறுதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.