தோ்தல் தேதி அறிவித்தாலும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்
தோ்தல் தேதி அறிவித்தாலும் பணிகளைப் புறக்கணிப்போம் என திட்டவட்டமாக கூறினா்.
சேலம்: பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். வருவாய்த் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவா்கள், தோ்தல் தேதி அறிவித்தாலும் பணிகளைப் புறக்கணிப்போம் என திட்டவட்டமாக கூறினா்.