திமுக சாா்பில் நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம்
திமுக நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம், முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா்: திமுக நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம், முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நகர அவைத் தலைவா் எம்.மாணிக்கம் வரவேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், தலைமைக் கழக பேச்சாளா் சூா்யா வெற்றிக்கொண்டான் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா்கள் கு.சின்னதுரை,பாரப்பட்டி சுரேஷ்குமாா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement