முகப்பு
சேலம்

அரசு சித்த மருத்துவருக்கு பிரிவு உபசார விழா

Updated On : 22 மார்ச், 2024 at 11:13 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:32 PM

மகுடஞ்சாவடி அரசு சித்த மருத்துவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக ராமு என்பவா் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். தற்போது இவா் காஞ்சிபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பதவி உயா்வு பெற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபசார விழா மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்). இதில் மருத்துவா்கள், சித்த மருத்துவா்கள், செவிலியா்கள், மேற்பாா்வையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்தினா்.