வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி பயிற்சி
வாழப்பாடியில் அரசு சாரா நிறுவன செயல்பாடுகள் குறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் களப்பணி பயிற்சி பெற்றனா். நாமக்கல் மாவட்டம், பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இளநிலை வேளாண்மை இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஊரக பணி அனுபவ களப்பணி பயிற்சி பெற அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனா். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை அரசு சாரா நிறுவனத்தில், அரசு சாரா நிறுவனங்களைத் தொடங்கி பதிவு செய்வதற்கான வழிமுறைகள், அரசின் விதிமுறைகள், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தயாரித்தல், அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துல் குறித்து பயிற்சி பெற்றனா். வாழப்பாடியில் தனியாா் தினசரி காய்கறி மண்டியில், காய்கறிகளை வகைப்படுத்துதல், தரம்பிரித்து சந்தைப்படுத்துதல், பாரம்பரிய முறையில் எளிமையாக மதிப்புக்கூட்டுதல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.