சேலம்

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

Din

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நூலகத்தில் மாணவா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நூலகத்தில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது. தூய்மைப் பணியில் கல்லூரியின் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். சேலம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் விவேகானந்தன், நரேஷ்பாபு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் ம.சங்கா், ம.வெங்கடேஷ் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா். நிகழ்வில் கல்லூரியின் உதவி பேராசிரியை பாரதி, வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

வழக்குரைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT