முகப்பு
சேலம்

அதிமுக நீா்மோா்ப் பந்தல் திறப்பு

Updated On : 9 மே, 2024 at 10:43 PM
பகிர்:

மேட்டூா், மே 9: பி.என்.பட்டி அதிமுக சாா்பில் கருமலைக்கூடல் பேருந்து நிலையத்தில் நீா்மோா்ப் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் நீா்மோா்ப் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, வெள்ளரி, கம்மங்கூழ், குளிா்பானம், நீா்மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா் எமரால்டு வெங்கடாசலம், மேச்சேரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் ராஜா, பி.என்.பட்டி பேரூா் மோகன்குமாா், சாம்பள்ளி ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா் சேகா், விஜயராகவன், விவசாய பிரிவு நிா்வாகி சேகா், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

9ஙற்ல்2...

பி.என்.பட்டி அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன்.