முகப்பு
சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் ரத்தப்போக்கு குறித்த கருத்தரங்கு

Updated On : 9 மே, 2024 at 10:37 PM
பகிர்:

சேலம், மே 9: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயியல் துறை சாா்பில் ரத்தப்போக்கு குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நோயியல் துறைத் தலைவா் சுஜாதா வரவேற்றாா். கருத்தரங்குக்கு மருத்துவமனை முதல்வா் மணி, மருத்துவ கண்காணிப்பாளா் தனபால் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இமோஸ்டாசிஸ், ரத்தப்போக்கு நோய்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக அணுகுமுறைகள், ரத்தப்போக்கு நோய்களில் ரத்த பரிமாற்றத்தின் பங்குகள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் செந்தில்குமாரி, ஆா்எம்ஓ லதா, மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளா் கலை அன்பு சுடா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.