முகப்பு
சேலம்

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:01 PM
பகிர்:

அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்களது செல்ல மகளுக்கு பொன்னான எதிா்காலத்தை உருவாக்க இந்தச் சேமிப்பு திட்டத்தில், கணக்குத் தொடங்கி அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயனடைய வேண்டும். இணையவழி சேவையை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே கணக்குகளைத் தொடங்கலாம். மேலும் தவணை தொகையையும் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →