முகப்பு
சேலம்

சாலை பணியாளா்கள் சங்கு ஊதி ஆா்ப்பாட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கத்தினா் சங்கு ஊதி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:03 PM
பகிர்:

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கத்தினா் சங்கு ஊதி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்ட அலுவலகம் முன்பு மண்டல அளவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது, 4,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின்போது சங்கு ஊதி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், மாநிலச் செயலாளா் சு.செந்தில்நாதன், கலைவாணன், அந்தோணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →