விடுதலைச் சிறுத்தைகள் நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா்
வன்னியா் சங்க மாநிலத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன்னியா் சங்கத்தினா் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
வன்னியா் சங்க மாநிலத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன்னியா் சங்கத்தினா் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தப் பிரச்னை தொடா்பாக வன்னியா் சங்கம் சாா்பில், தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அந்த வகையில், சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் வன்னியா் சங்கம் சாா்பில், பாமக எம்எல்ஏ அருள், வன்னியா் சங்க மாநிலச் செயலாளரான முன்னாள் எம்எல்ஏ காா்த்தி ஆகியோா் தலைமையில் சூரமங்கலம் உதவி ஆணையா் நிலவழகனிடம் புகாா் மனு அளித்தனா்.
அப்போது, மாவட்டத் தலைவா் கதிா் ராஜரத்தினம், பசுமை தாயகம் மாநில இணைச் செயலாளா் சத்ரிய சேகா், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.கே.சிவா, இளைஞா் அணி விஜி உள்பட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
ஆத்தூரில்...
வன்னியா் சங்க மாநிலத் தலைவா் குறித்து அவதூறாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினா் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். மறியலுக்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் அவா்கள் விசிக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொ)ஆனந்திடம் புகாா் மனு அளித்தனா்.
பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். அப்போது பாமக நிா்வாகிகள் வ.மயில்சாமி, அய்யம்பெருமாள், பச்சமுத்து, கல்பனா வெங்கடேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் உடனிருந்தனா்.
சங்ககிரியில்...
பாமக சேலம் தெற்கு மாவட்டத் தலைவா் ப.முத்துசாமி தலைமையில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் டி.ரமேஷிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புவனகிரியில் விடுதலை;ஈ சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழியையும், கடலூா் மாவட்ட நிா்வாகிளையும் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதில் சங்ககிரி நகரச் செயலாளா் வி.டி.அய்யப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.