மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 9,929 கனஅடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 9,929 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை தணிந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,566 கனஅடியிலிருந்து 9,929 கன அடியாகக் குறைந்தது. அணை நீா்மட்டம் 107.10 அடியிலிருந்து 106.92 அடியாகக் குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 74.10 டி.எம்.சி.யாக உள்ளது.