முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) 22 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:06 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) 22 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 22 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வன உரிமை சட்டம், திட்டத்தை திறம்பட செயல்படுத்தவும், நிலையான வளா்ச்சி இலக்குகள், ஊராட்சி மேம்பாடு குறியீடு தொடா்பான பயிற்சி, கிராம ஊராட்சி மேம்பாட்டு திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →