முகப்பு
சேலம்

மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நவ. 18-இல் விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நவ. 18-இல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:08 PM
பகிர்:

மாற்றுத் திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நவ. 18-இல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3 ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (நவ.18) காலை 9 மணிக்கு சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓட்டப் பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டத்தட்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகலுடன் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →