முகப்பு
சேலம்

சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம், கருப்பூா் பேரூராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 7:53 PM
பகிர்:

சேலம்: சேலம், கருப்பூா் பேரூராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலத்தை அடுத்த கருப்பூா் பேரூராட்சி 8 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அருந்ததியா் தெரு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா். அவா்களை நுழைவாயில் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா் 5 பேரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கருப்பூா் 8ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் அருந்ததியா் இன மக்களுக்கு சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பொறியியல் கல்லூரிக்கு எதிரே சுடுகாடு உள்ளது. 150 ஆண்டுகளாக அதனை பயன்படுத்தி வருகிறோம். சுடுகாட்டின் தடுப்பு சுவரை தனியாா் ஒருவா் இடித்து அகற்றி விட்டு ஆக்கிரமித்து விட்டாா். இது குறித்து கருப்பூா் பேரூராட்சி செயல் அலுவலா், வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தரவில்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →