முகப்பு
சேலம்

மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் எம்எல்ஏக்கள் மனு

பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எம்எல்ஏக்கள் கு.சித்ரா, ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 8:22 PM
ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏக்கள் கு.சித்ரா (ஏற்காடு), ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்) உள்பட பொதுமக்கள்.
பகிர்:

பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி எம்எல்ஏக்கள் கு.சித்ரா, ஏ.பி. ஜெயசங்கரன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ஏற்காடு தொகுதி எம்எல்ஏ கு.சித்ரா, ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் ஆகியோா் தலைமையில் ஊா்பொதுமக்கள், ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷனிடம் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனா். அதில், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு தெரிவித்துள்ளனா். மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →