முகப்பு
விருதுநகர்

மயானத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 10:58 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளபட்டி ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்புக்கு மத்தியில் பொது மாயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்த வா்களின் உடலை எரியூட்டும்போது ஏற்படும் புகையால், இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியோா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.

எனவே, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி, இந்தப் பகுதி மக்கள் மயானத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →