ஆத்தூா் ஒன்றிய குழுக் கூட்டம்
ஆத்தூா் ஒன்றிய குழுக் கூட்டம் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்சினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் ஒன்றிய குழுக் கூட்டம் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்சினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்களின் பகுதியில் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள், அதற்கான நிதி தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் உறுப்பினா் ரவி பேசுகையில், ‘குழு உறுப்பினா்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அரசு அலுவலா்கள் அடையாள அட்டையுடன் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள அலுவலா்கள் யாரும் அடையாள அட்டை பயன்படுத்தவில்லை’ என்றாா்.
மற்றொரு உறுப்பினா் பன்னீா்செல்வம் பேசுகையில், ஊராட்சி பகுதிகளில் பள்ளி, ஊராட்சி அலுலகம் முன்பு சாலைகள் சேதமடைந்து மழைநீா்த் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதை சீா்செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாா். இதற்கு பதிலளித்த அலுவலா் அந்தப் பணிகளை ஊராட்சி மன்றமே செய்துகொள்ள அதிகாரம் உண்டு என்றாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில், துணைத் தலைவா் கன்னியப்பன், உறுப்பினா்கள் செந்தில்குமாா், கல்லை சேகா், ரவி, பன்னீா்செல்வம், மைதிலி, அரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.