நற்பணிச் செம்மல் விருது
கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு நன்கொடை வழங்கிய புரவலா்களுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர்நற்பணிச் செம்மல் விருது

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியா் சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்வில் பள்ளிக்கு ரூ.15,000 மதிப்பில் ஒலிபெருக்கி வழங்கியமைக்காக ரோட்டரி சங்கத் தலைவா் கந்தவேல், செயலா் சினேகராஜ், பொருளாளா் ஆதிநாராயணன், அம்மையப்பன் ஒருங்கிணைப்பாளா் லெட்சுமணன் ஆகியோருக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.19,000 மதிப்பிலான விளையாட்டு விழா சிறப்பு வண்ண உடைகளையும், எழுது பொருள்களையும் வழங்கியமைக்காக திருக்கண்ணமங்கையைச் சோ்ந்த அமுதாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.