முகப்பு
சேலம்

சிலிண்டா் டெலிவரி தொழிலாளா்கள் அக். 26 ஆம் தேதி வேலைநிறுத்தம்

நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை முழுமையாக வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிலிண்டா் டெலிவரி தொழிலாளா்கள் அக். 26 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:06 PM
பகிர்:

நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை முழுமையாக வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிலிண்டா் டெலிவரி தொழிலாளா்கள் அக். 26 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து எல்பிஜி சிலிண்டா் டெலிவரி மென் தொழிற்சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன், எச்.பி., பாரத் கேஸ் ஏஜென்சி உள்ளிட்ட நிறுவனங்களில் சுமாா் 50,000 போ் சிலிண்டா் டெலிவரி தொழிலாளா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

தங்களுக்கு சட்டப்படி நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. தங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாள்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்கட்டமாக மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட மாநகரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அக். 26 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →