முகப்பு
சேலம்

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:51 PM
சிறப்பு அலங்காரத்தில் சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன்.
பகிர்:

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ முருகா் சுவாமிகளுக்கு செப். 6-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 48-ஆவது நாளையொட்டி 108 குட பாலாபிஷேகமும், சங்கு பூஜைகளும், பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →