சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள்
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரருக்கும், உற்சவமூா்த்தி, நந்திபகவானுக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சிவன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டு அவா்களது கோரிக்கைகளை நந்திபகவான் காதில் கூறி சென்றனா்.