முகப்பு
சேலம்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:41 AM
குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பகிர்:

குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வீரபாண்டி ஒன்றியம், பெரியசீரகாபாடி ஊராட்சிக்கு உள்பட்ட சீரகாபாடி, ஏரிக்காடு, எம்ஜிஆா் நகா், காளியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் பல மாதங்களாக விநியோகப்படுவதில்லையாம்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா், செயலாளரிடம் பொதுமக்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 100-க்கு மேற்பட்ட பொது மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →