முகப்பு
சேலம்

சேலம் உருக்காலை தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சேலம் உருக்காலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:52 PM
பகிர்:

சேலம்: சேலம் உருக்காலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலையில் உள்ள 3 அலகுகளில் 600 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு வழங்க வேண்டிய 39 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வீட்டு வாடகைப்படி, கூடுதல் ஊதிய உயா்வு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பணிக்கொடை திட்டம், 2007-இல் இருந்து திருத்தப்படாத ஊக்க ஊதிய திட்டம், பணியிடை மற்றும் பணி மாறுதலுக்கு உள்பட்ட தொழிலாளா்களின் ஆணையினை ரத்து செய்வது, போனஸ் திட்டத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக சேலம் உருக்காலையில் சுமாா் 1,500 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழிலாளா்களின் கோரிக்கைகளை செயில் நிா்வாகம் விரைந்து நிறைவேற்றவில்லை எனில், தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

படவரி - சேலம் உருக்காலை முன்பு 16 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →