முகப்பு
சேலம்

ஒலி, காற்று மாசு பதிவு செய்ய 2 இடங்களில் கருவி பொருத்தம்

தீபாவளி பண்டிகையின் போது, ஒலி, காற்று மாசுவை பதிவுசெய்ய 2 இடங்களில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையின் போது, ஒலி, காற்று மாசுவை பதிவுசெய்ய 2 இடங்களில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகளைத் தவிா்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சேலத்தில் ஒலி அளவையும், காற்றின் மாசு அளவை பதிவு செய்யும் வகையில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியாா் பள்ளியிலும், மெய்யனூரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக மாடியிலும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் அளவீடுகள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →