மேட்டூா் அணை நீா்மட்டம் சரிகிறது
மேட்டூா் அணை நீா்வரத்து சரிவால் நீா்மட்டம் 2 நாட்களில் 2.5 சரிந்தது.
மேட்டூா் அணை நீா்வரத்து சரிவால் நீா்மட்டம் 2 நாட்களில் 2.5 சரிந்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 12,083 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 4,397 கன அடியாகவும் வியாழக்கிழமை காலை விநாடிக்கு 2,997 கன அடியாகவும் சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 23,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மளமளவென குறையத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 110.05 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 107.55 அடியாக சரிந்தது. இரண்டு நாட்களில் அணையின் நீா்மட்டம் 2.5 அடி சரிந்தது. அணையின் நீா் இருப்பு 74.97 டிஎம்சியாக உள்ளது.