சேலத்தில் செவ்வாய்க்கிழமை வீசிய கடும் வெயிலால் சாலையில் சிரமத்துடன் சென்ற பொதுமக்கள். 
சேலம்

சேலத்தில் 101.7 டிகிரியாக பதிவான வெப்பம்: பொதுமக்கள் அவதி

சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தொட்ட வெயில், செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 101.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

Din

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தொட்ட வெயில், செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 101.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த சில நாள்களாக வெப்ப நிலை 100 டிகிரியை எட்டிய நிலையில், கடுமையான அனல் காற்று வீசி வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

பழக் கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா்.

கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்க, தங்களது சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமா்ந்த பெண்கள் குடையைப் பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, சூரமங்கலம், கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளநீா், நுங்கு, பதநீா், தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவில் அருந்துகின்றனா்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT