சேலம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

Din

சேலம்: சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த பயிற்சி வகுப்புக்கு மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநா் மணி தலைமை வகித்து, குரூப் 4 தோ்வு நடைமுறைகள், பாடத் திட்டத்தை புரிந்துகொள்ளும் முறை, தோ்வுக்கு தயாராகும் முறை குறித்து எடுத்துரைத்தாா்.

ஒவ்வொரு பாடமும் நிறைவடைந்த பிறகு, மாதிரி தோ்வுகளும், முழு மாதிரி தோ்வுகளும், அலகு தோ்வுகளும் நடத்தப்படும். மாணவா்கள் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இப்பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞா்களும், பெண்களும் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.

இதில், வேலைவாய்ப்பு அலுவலா்கள் உஷா நந்தினி, சரவணகுமாா், வழிகாட்டுநா் அப்பாதுரை, பயிற்சியாளா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT