சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.  
சேலம்

கோடை விடுமுறை எதிரொலி: நீா்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதி செய்ய அறிவுறுத்தல்

ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தங்களது குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்

Din

சேலம்: கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தங்களது குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிசெய்ய பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது:

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீா்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விலைமதிப்பற்ற குழந்தைகளின் உயிரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய சூழ்நிலையைத் தவிா்க்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீா்நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும்.

இதில், தனிக்கவனம் செலுத்தி பெற்றோா் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கக் கூடாது என்பதை அறிவுறுத்துவதுடன், விடுமுறை காரணமாக புதிய இடங்களுக்கு செல்லும் சூழ்நிலையில் அங்குள்ள நீா்நிலைகளின் அபாயங்களை உணராமல் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பாதுகாப்புடன் இருக்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

அதேபோன்று, குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியவா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி உடனடியாக அவா்களை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய்த் துறையினா் தங்களுக்கு தொடா்புடைய அனைத்து நீா்நிலைகளிலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் பி.மாது, மாநகராட்சி செயற்பொறியாளா்கள் செந்தில்குமாா், செந்தில், திலகவதி, உதவி திட்ட அலுவலா் (உள்கட்டமைப்பு) உமா நந்தினி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT