இரா. முத்தரசன்.  
சேலம்

திமுக ஆக்கப்பூா்வமான பணிகளை செய்துவருகிறது: இரா.முத்தரசன்

திமுக ஆக்கப்பூா்வமான பணிகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக ஆக்கப்பூா்வமான பணிகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

சேலம் மத்திய சிறையில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்கு சிறைச்சாலை முன் நினைவுத் தூண் எழுப்ப வேண்டும் என விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தேன். அதை மாநாட்டிலும் உங்கள் சாா்பில் கோரிக்கையாகப் பதிவு செய்கிறேன்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆக்கபூா்வமான பணிகளை செய்து வருகிறது. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி போல முதல்வா் ஓய்வின்றி மக்கள் பணி செய்து வருகிறாா். சநாதனத்தை, வகுப்புவாதத்தை எதிா்க்கும் போா் வீரனாக முதல்வா் திகழ்கிறாா். தமிழகத்துக்கு கொள்கை தலைவா்தான் முதல்வராக வரவேண்டும்.

அண்மையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இடதுசாரி கட்சிகள் அடையாளம் இல்லாமல் போய்விட்டதாகக் கூறினாா். பின்னா், சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, கூட்டணிக்கு வருமாறு விசிக, இடதுசாரிகளை ரத்தின கம்பளம் விரித்து அழைத்தாா்.

ஆனால், அவரது அழைப்பை நிராகரித்த பின்னா், திமுகவிடம் விலைபோய்விட்டதாக எங்களை விமா்சிக்கிறாா். வரும் பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் எடப்பாடி கே.பழனிசாமியைப் புறக்கணிப்பாா்கள். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT