நீட் விவகாரம்: என்டிஏ இயக்குநரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், என்டிஏ இயக்குநரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்தது குறித்து...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் கூறிய கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றி என்டிஏ இயக்குநர் அபிஷேக் சிங் கூறுகையில், “வினாத்தாள் முழுவதும் கசியவில்லை. குறிப்பிட்ட சில கேள்விகள் மட்டுமே பரப்பப்பட்டன. மேலும், இது என்டிஏ அமைப்பு மூலம் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த டி. ராஜா, “அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படிப் பேசுவது மிகவும் வெட்கக்கேடானது. சில கேள்விகள் மட்டும் எப்படி கசிந்தன? இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? இந்த சம்பவம் இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்த முழுப் பிரச்னையையும் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். சில கேள்விகள் மட்டுமே கசிந்தன, வினாத்தாள் கசியவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மக்களுக்குப் புரியாது என்று அவர்கள் நினைக்கிறார்களா? நாம் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இதுபோன்ற கருத்துகள் இளைஞர்களை மேலும் கொந்தளிப்படையச் செய்யும். அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இருப்பவர்களிடமிருந்து வரும் இதுபோன்ற கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
D. Raja, National General Secretary of the Communist Party of India (CPI), has condemned the remarks made by Abhishek Singh, Director of the National Testing Agency (NTA), regarding the NEET question paper leak controversy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.