FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ-க்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

என்டிஏ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்விகள்
பகிர்:

இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

நிகழாண்டுக்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்த தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், என்டிஏ அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் தேசிய தேர்வு முகமை மற்றும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டின் முதன்மையான குடுமைப் பணித் தேர்வில் இதுபோன்ற (வினாத்தாள் கசிவு) சம்பவங்கள் ஒருபோதும் நடந்ததில்லை. அவர்களிடமிருந்து (யுபிஎஸ்சி) தேசிய தேர்வு முகமை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த உயர்நிலைக் குழு, தேர்வுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மொத்தம் 101 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியும், மற்றவற்றைச் செயல்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

வினாத்தாளைத் தயாரிக்கும் செயல்முறையிலேயே இந்தப் பிரச்னை உருவானது. ஆனால், தற்போது வினாத்தாள் தயாரிக்கும் செயல்முறையும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

கண்டறியப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு விட்டன. வரவிருக்கும் தேர்வுகளில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது. சீர்திருத்தமே எங்கள் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் தெரிவித்ததாவது, பொறுப்புக் கூறல் இல்லாவிட்டால், சீர்திருத்தங்களால் மட்டும் இந்தப் பிரச்னை தீராது. பொறுப்புக் கூறல் எழுப்பப்படும் வரை, இந்தப் பிரச்னை தீராது.

பொறுப்புக் கூறல் என்பது தனிநபர் ஒருவரைக் குற்றஞ்சாட்டுவதாக இல்லாமல், இறுதிப் பொறுப்பு யாரிடம் உள்ளது என்பதை உறுதி செய்வதே என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் பிரதமர் மேற்பார்வையிட்டு வருவதாக சொலிசிட்டர் கூறினார். இதன் மூலம் நீட் வினாத்தாள் கசிவை மத்திய அரசு எவ்வளவு தீவிரமாகக் கையாளுகிறது என்பதையும் வலியுறுத்தினார்.

summary

NEET paper leak: Supreme Court asks NTA to learn from UPSC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments