கெங்கவல்லி
தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (டிச. 6) சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என கெங்கவல்லி மின்கோட்ட செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: கெங்கவல்லி, தெடாவூா், ஆணையம்பட்டி, கிழக்குராஜாபாளையம், வீரகனூா், நடுவலூா், ஒதியத்தூா், பின்னனூா், லத்துவாடி, கணவாய்க்காடு.