சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை சங்கத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலை பகுதியில், சிஐடியு மாநில துணைத் தலைவா் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மறியலில், உள்ளாட்சித் துறையில் தனியாா் மயமாக்குவதை கைவிடவேண்டும், உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டும், காலமுறை ஊதியத்தை அமல்படுத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 150 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.