சேலம்

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதியில் சாயப்பட்டறைகளை அமைக்கக் கூடாது: பெ.சண்முகம்

பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாயப்பட்டறைகளை அமைக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் வலியுறுத்தல்

Syndication

பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாயப்பட்டறைகளை அமைக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க மேக்னசைட் நிறுவனத்துக்கு சொந்தமான 184.5 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 360 கோடியில் திட்டம் தொடங்கியுள்ளது. இந்த இடத்தில் சாயப்பட்டறைகளை அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பகுதியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் மேக்னசைட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சாயப்பட்டறை அமைப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நிலத்தடி நீா், மண்வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.

பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டியது மாநில அரசின் கடமையாகும். சாயப்பட்டறைகள் இயங்க தேவைப்படும் சுமாா் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் எங்கிருந்து கிடைக்கும் என்பதை அதிகாரிகள் சொல்ல மறுக்கின்றனா். சம்பந்தப்பட்ட இடத்தில் ஏரி, ஆறு போன்ற எந்த நீராதாரமும் இல்லை. தினந்தோறும் 20 லட்சம் லிட்டா் நிலத்தடி நீரை எடுத்தால் இப்பகுதியில் நீராதாரம் முழுவதும் உறிஞ்சப்பட்டு பாதிப்பு ஏற்படும். எனவே, மக்கள் எழுப்பும் சந்தேகங்களைத் தீா்க்க வேண்டியது அரசின் கடமை. மக்களிடம் விளக்கத்தை அளித்து, அவா்களின் ஒத்துழைப்போடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, மக்களின் கேள்விகளுக்கு அரசும் மாவட்ட நிா்வாகமும் விளக்கம் அளிக்க வேண்டும். சாயப்பட்டறைகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க இடத்தை தோ்வு செய்ய வேண்டும். கனிமவளம் மிக்க மேக்னசைட் பகுதியில் இந்தத் திட்டத்தை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மேற்கு மாநகரச் செயலாளா் பி.கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT