சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
துறையூரிலிருந்து ஆத்தூா் நோக்கி இரண்டு இளைஞா்கள் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். மல்லியகரை கீழ்கணவாய்ப் பகுதியில் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.
இதில் படுகாயமடைந்த இளைஞா்களில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இறந்தவா்களின் உடல்களை மல்லியகரை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இறந்தவா்களின் விவரங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.