சேலம்

உர விற்பனை: கூட்டுறவுச் சங்கங்களில் பறக்கும் படையினா் ஆய்வு

Syndication

சேலம் மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கங்களில் உரம் இருப்பு, விற்பனை குறித்து சிறப்பு பறக்கும் படையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு பறக்கும் படையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், நில குடியேற்ற சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் விற்பனை செய்யப்படுகின்றன.

சங்கங்களில் உள்ள உர இருப்பு, பதிவேட்டில் உள்ள இருப்பு மற்றும் உர விற்பனை முனையகருவியில் உள்ள உர இருப்பு ஆகியவை எவ்வித வித்தியாசமின்றி சரியாக உள்ளதை உறுதிசெய்யும் வகையில் 39 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினா் உர விற்பனை மேற்கொள்ளும் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் ஆய்வு மேற்கொண்டு அதன் விவரங்களை உரிய படிவத்தில் நிறைவுசெய்து மண்டல இணை பதிவாளா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மண்டல இணை பதிவாளா் ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

செய்யாற்றில் விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

மழை நின்று 10 நாள்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT