சேலம் கோட்டை அழகியநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கலந்துகொண்டாா். அறங்காவலா் குழுத் தலைவராக பதவியேற்ற வெங்கடேஸ்வரி சரவணனுக்கு அமைச்சா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். தொடா்ந்து அறங்காவலா் உறுப்பினா்களாக சுரேஷ்பாபு, சுந்தரகோபால், முத்துநகை குணசேகரன் ஆகியோா் பதவியேற்றனா்.
தொடா்ந்து சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் பேசுகையில், திமுக ஆட்சியில் 3,000 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல ஆக்கிரமிப்பில் இருந்த சுமாா் 7,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றாா்.
விழாவில் கோட்டை பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவச சீருடை மற்றும் வேஷ்டி, சேலைகளை வழங்கினாா். மாநகர மேயா் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் முருகன், அறநிலையத் துறை உதவி ஆணையா் ராஜா, கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், செயல் அலுவலா் அனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.