கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் அடைவு திறன் குறித்து வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா் ஆய்வு செய்தாா்.
தமிழகம் முழுவதும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் கற்றல் அடைவு திறன் பயிற்சி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலம் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் மேம்பாடு குறித்து கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா், கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளான காந்திநகா், கோனேரிப்பட்டி, வாழக்கோம்பை உள்ளிட்ட நடுநிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சிகளை வழங்க ஆசிரியா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.