சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா? எனக் குறிப்பிட்டு, கருப்பு நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களில், முருகனின் வேல், மசூதி, தேவாலயங்களின் படங்களுடன் அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா? காக்க காக்க தமிழ் நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம் வெல்வோம் என்ற வாசகத்துடன் கருப்பு வண்ணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியவா்கள் யாா்? எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள்? என்பது குறித்து, வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படவரி:
பி.எஸ்.01: வாழப்பாடியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.