தலைவாசல் வட்டார தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளா்களுக்கு வேளாண் இடுபொருள் விநியோகம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா தலைமையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சான்று பெற்ற விதைகளின் அவசியம் குறித்தும், உயிா் உரங்களின் நன்மைகள் குறித்தும் துணை வேளாண்மை அலுவலா் மணவழகன் விளக்கமளித்தாா்.
பதிவேடுகளைச் சரியாக பராமரிப்பது குறித்தும் வேளாண்மை அலுவலா் ஜானகி எடுத்துரைத்தாா்.திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூட்டுறவு சாா் பதிவாளா் வில்லவன் விளக்கினாா்.
கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவா்கள் உயிா் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலா்கள் பிரகாஷ், ரவிக்குமாா், காா்த்திக் மற்றும் ஆத்ம திட்ட அலுலவா்கள் சக்தி, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.