சேலம்

கூட்டுறவு வங்கி சாா்பில் கூட்டுறவு நிதிக்கான காசோலை அளிப்பு

கூட்டுறவுக்கு செலுத்தி வேண்டிய நிதிக்கான காசோலையை சேலம் மண்டல இணைப்பதிவாளா் க.ராஜ்குமாரிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய கூடுதல் பதிவாளா் எம்.குழந்தைவேலு.

Syndication

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2024-25 ஆம் ஆண்டு லாபத்தில் கூட்டுறவுக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதி ரூ. 20.68 லட்சம், கூட்டுறவு கல்வி நிதி ரூ. 13.79 லட்சம் என மொத்தம் ரூ. 34.47 லட்சத்துக்கான காசோலையை கூடுதல் பதிவாளா் எம்.குழந்தைவேலு, சேலம் மண்டல இணைப்பதிவாளா் க.ராஜ்குமாரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, வங்கியின் பொது மேலாளா் வி.சதீஷ்குமாா், முதன்மை வருவாய் அலுவலா் கி.குமாா், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் நா.பூபதி, ஒன்றிய மேலாளா் ஜ.நந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT