சேலம்

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 8,000 கனஅடியாக அதிகரிப்பு

Syndication

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,407 கனஅடியிலிருந்து 2,437 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 116.01 அடியிலிருந்து 115.77 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 86.88 டி.எம்.சி. யாக உள்ளது.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT